மீனின் விலை அதிகரிப்பு!
Tuesday, March 13th, 2018
சீரற்ற காலநிலை மற்றும் கடல் கொந்தளிப்பால் அனேகமான மீனவர்கள் ஆழ்கடல் மீன்பிடியை தவிர்த்துள்ளனர். காற்றுடன் கூடிய மழை மற்றும் கடல் கொந்தளிப்பால் யாழ்ப்பாணக் குடாநாடு மற்றும் தீவுப்பகுதி, வடமராட்சி போன்ற பிரதேசங்களில் மீனவர்கள் நேற்று ஆழ்கடல் மீன்பிடிப்பை தவிர்த்தனர். அதிகமானோர் கரைவலை மூலமே மீன்பிடியில் ஈடுபட்டனர்.
இதன் காரணத்தால் கடலுணவின் வருகை குறைந்தும் விலை அதிகரித்தும் காணப்பட்டது. பாசையூர், குருநகர், கொட்டடி, நாவாந்துறை, கல்வியங்காடு மீன் சந்தைகளில் கடலுணவுகளில் விலை அதகரித்துக் காணப்பட்டன.
அத்துடன் வடமராட்சிப் பிரதேசத்தில் இருந்து யாழ்ப்பாண நகருக்கு எடுத்து வரப்பட்ட கடலுணவுகளின் விலையும் அதிகரித்துக் காணப்பட்டது.
Related posts:
குற்றச்சாட்டுக்கு தேர்தல் ஆணையாளர் பதில்!
இடைக்கால கணக்கறிக்கையை சமர்ப்பிக்கத் தயாராகும் அரசு - மக்கள் மத்தியிலான பணப்புழக்கத்துக்கு இது உதவும...
மாதகல் தம்பில்துறை இறங்கு துறைக்கு அமைச்சர் டக்ளஸ் விஜயம் - நிலைமைகள் தொடர்பில் ஆராய்வு!
|
|
|


