சுதந்திரக் கிண்ண 2 ஆவது போட்டியில் இந்திய அணி வெற்றி!

Friday, March 9th, 2018

சுதந்திர கிண்ண இருபதுக்கு இருபது கிரிக்கட் தொடரின் இந்தியா ௲ பங்களாதேஷ் மோதிய இரண்டாவது போட்டியில் இந்தியா அணி 6 விக்கட்களினால் வெற்றி பெற்றுள்ளது.

நாயண சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் களத்தடுப்பை தேர்ந்தெடுத்துள்ளது. அதனடிப்படையில் முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கட்களை இழந்து 139 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 18.4 ஓவர்கள் நிறைவில் 4 விக்கட்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது. துடுப்பாட்டத்தில் இந்திய அணி சார்பாக ஷிகார் தவான் 55 ஓட்டங்களை பெற்று கொடுத்தார்.

Related posts:

கிறிக்கெற் துறையின் முக்கிய பொறுப்பொன்று முத்தையா முரளிதரனிற்கு வழங்கப்பட்டுள்ளது - அமைச்சர் நாமல் ...
நவீன விவசாயத்தை மேம்படுத்துவதன் மூலம் நாட்டில் வலுவான பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியும் என்றும் அத...
கனேடிய  - இலங்கை வர்த்தக சம்மேளனம் ஏற்பாடு - வடக்கில் முதலீடுகளை ஈர்ப்பதற்கு  வருகின்றது சந்தர்ப்பம்...