20 தொடரை இந்த அணி தான் வெல்லும் – ஜெயவர்த்தனே!
Thursday, March 8th, 2018
இலங்கை, வங்கதேசம், இந்தியா ஆகிய அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு டி20 தொடர் இலங்கையில் நடைபெற்று வருகிறது.
இதில் நேற்று நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணியை, இலங்கை அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
இந்நிலை இத்தொடர் துவங்குவதற்கு முன்னர் இலங்கை அணியின் முன்னாள் வீரரான ஜெயவர்த்தனே, இலங்கை அணியில் நட்சத்திர வீரர்களான ஏஞ்சலோ மெத்யூஸ், அசலா குணரத்னே போன்ற வீரர்கள் இல்லாவிட்டாலும், இலங்கை அணி தொடரை கைப்பற்றுவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறியுள்ளார்.
ஏனெனில் இலங்கை அணியின் பயிற்சியாளரான சந்திக ஹத்ரூசிங்கா மீது நம்பிக்கை உள்ளது என்றும் இந்திய அணியில் முக்கியமான வீரர்கள் இல்லாததும் ஒரு காரணம் என ஜெயவர்த்தனே கூறியுள்ளார்.
ஜெயவர்த்தனே கூறியது போன்று முதல் போட்டியிலே இந்திய அணியை, இலங்கை பந்தாடியது குறிப்பிடத்தக்கது.
Related posts:
கிண்ணத்தை வென்றது வேலணை ஐயனார் விளையாட்டுக் கழகம்
இங்கிலாந்து வீரரை புகழும் அவுஸ்திரேலிய பயிற்சியாளர்!
இளைஞர் விவகார அமைச்சு சுகததாச விளையாட்டு வளாகத்திற்கு மாற்றம் – அமைச்சர் நாமல் ராஜபக்ஸ நடவடிக்கை!
|
|
|


