நாட்டில் டெங்கு தொற்று குறைவு!
Thursday, March 8th, 2018
2017 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது இந்த ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் டெங்கு தொற்று 50 சதவீதத்தால் குறைவடைந்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவுதெரிவித்துள்ளது.
இருப்பினும் எதிர்வரும் இடைபருவ பெயர்ச்சி மழைக்காலத்தில் டெங்கு தெற்று அதிகரிக்கக் கூடிய அச்சுறுத்தல் காணப்படுவதாகவும் டெங்கு ஒழிப்பு பிரிவு குறிப்பிட்டுள்ளது.
இந்தநிலையில் தெரிவு செய்யப்பட்ட 9 மாவட்டங்களில் கடந்த இரண்டு மாதப்பகுதியில் 70 சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவுகளில் விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள்முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் தேசிய டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படும் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
Related posts:
அனைத்து புலனாய்வு பிரிவினரும் தயார் நிலையில் - பாதுகாப்பு செயலாளர் !
கடந்த மூன்று வாரங்களில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு - தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் சமூ...
யாழ்ப்பாண மாவட்டத்தில் 30 ஆயிரம் லீட்டர் பெற்றோல் மேலதிகமாக மக்களால் பெற்றுக்கொள்ளப்பட்டு வருகிறது -...
|
|
|


