போதை மறுவாழ்வு நிலையத்தில் தீ – 24 பேர் பலி!
Sunday, March 4th, 2018
அசர்பைஜான் நாட்டின் தலைநகரான பாகுவில் செயற்பட்டு வந்த போதை மறுவாழ்வு நிலையம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 24 பேர் உயிரிழந்துள்ளனர்.போதை மறுவாழ்வு நிலையத்தில் இன்று காலை திடீரென தீ பரவியுள்ளது.
தகவலறிந்த தீயணைப்புப் படையினர் விரைந்து சென்று தீயணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மீட்புப் பணியும் முன்னெடுக்கப்பட்டது.
எனினும், அந்த நிலையத்தில் சிகிச்சை பெற்று வந்த 24 பேர் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
தீயில் சிக்கிய மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தீ விபத்திற்கான காரணங்கள் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
Related posts:
சீனாவின் பிரம்மாண்ட மேம்பாலம் இந்த வருட இறுதிக்குள் திறப்பு!
பொருளாதாரத்தை மேம்படுத்த 20 இலட்சம் கோடி ரூபாய் மதிப்பில் சிறப்புத்திட்டங்கள் – பாரதப் பிரதமர் நரேந்...
தன்னை அணு ஆயுத நாடாக பிரகடனப்படுத்தியது வடகொரியா - முடிவை மாற்ற முடியாதது என்றும் வடகொரிய தலைவர் கிம...
|
|
|


