குவைத்தில் தங்கியுள்ளோருக்கான பொது மன்னிப்புக் காலம் நீடிப்பு!
Saturday, February 24th, 2018
சட்டவிரோதமாக குவைத் நாட்டில் தங்கியுள்ளவர்களை அங்கிருந்து வெளியேற வழங்கப்பட்டிருந்த பொது மன்னிப்புக் காலம் ஏப்பிரல் 22 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
இந்த பொது மன்னிப்புக் காலம் ஜனவரி 29 ஆம் திகதி முதல் பெப்ரவரி 22 ஆம் திகதி வரை அமுலில் இருந்தது. இந்நிலையில் அந்த பொது மன்னிப்புக் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.
இலங்கையைச் சேர்ந்த 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குவைத்திலிருந்து வெளியேறுவதற்காக தற்போது அந்நாட்டு தூதரகத்தில் பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
இரண்டாவது நாளாக தொடரும் தொண்டராசிரியர்களின் போராட்டம்!
மழை நீரை சேமிக்க புதிய நடைமுறை!
புலிகள் தொடர்பிலான சட்டம் விரைவில் கொண்டுவரப்படும் - அமைச்சர் சரத் வீரசேகர தெரிவிப்பு!
|
|
|


