ஜனாதிபதி – பிரதமர்  முக்கிய சந்திப்பு!

Friday, February 23rd, 2018

நாட்டில் அரசியல் ஸ்திரமற்ற நிலை உருவாகியதை அடுத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் முக்கிய சந்திப்பொன்றை நடத்தியுள்ளனர் என செய’;திகள் வெளியாகியுள்ளன.

நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் நேற்று மதியம் நடைபெற்ற இந்தத் சந்திப்பின்போது அமைச்சரவை மறுசீரமைப்பு மற்றும் சமகால அரசியல் நிலவரம் என்பன தொடர்பில் பேசப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

அமைச்சர்களான மலிக் சமரவிக்ரம மற்றும் கபீர் ஹாஸிம் ஆகியோரும் இந்தச் சந்திப்பில் பங்கேற்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்தச் சந்திப்பின் அடிப்படையில், அமைச்சரவை மறுசீரமைப்பு சற்று பிற்போடப்படலாம் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

Related posts:


முக்கொம்பான் ஆசிரியர்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்கை - பொன்னாலை - முக்கொம்பான் பேருந்த...
நடுத்தர வயதுடையவர்களிடையே உயர் இரத்த அழுத்த இறப்புகள் அதிகரிப்பு – வைத்திய நிபுணர்கள் எச்சரிக்கை!
வருட இறுதிக்குள் உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு நடவடிக்கையை நிறைவுசெய்ய எதிர்பார்ப்பு - நிதி இராஜாங்க அ...