இலங்கையில மின்வெட்டைத் தவிர்க்க செயற்கை மழை!
Thursday, February 22nd, 2018
இலங்கையில் செயற்கை மழையை ஏற்படுத்துவதற்காக இலங்கை வந்துள்ள தாய்லாந்து தொழில்நுட்ப நிபுணர் குழு நேற்று தமது பணிகளை ஆரம்பித்துள்ளது.
இவர்கள் நேற்று முதல் நீர்த்தேக்கங்களை அண்மித்த பகுதிகளில் ஆய்வுப் பணியை ஆரம்பித்துள்ளனர் என்று மின்சக்தி மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இன்றும் இந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்படவுள்ளன என அமைச்சின் ஊடகப் பேச்சாளர் சுலக்ஸன ஜயவர்தன குறிப்பிட்டுள்ளார்.
நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் 59 வீதம் வரை குறைவடைந்துள்ளதால் நீர்மின் உற்பத்தி மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே இடம்பெறுவதாக மின்சக்தி மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சின் ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார்.
Related posts:
பாதுகாப்பு தொடர்பில் அச்சம் கொள்ளத் தேவையில்லை - ஜனாதிபதி!
மக்களை பாதுகாப்பதற்கே அரசு முன்னுரிமை வழங்குகிறது - பிரதமர் மஹிந்த ராஜபக்ச சுட்டிக்காட்டு!
திங்கள்முதல் நாட்டிலுள்ள அனைத்து அரச பாடசாலைகளின் கற்றல் நடவடிக்கைளும் முழுமையாக ஆரம்பம் - புதிய சுக...
|
|
|


