7 மணி நேர போராட்டத்தின் பின்னர் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது – இராணுவம்

Monday, June 6th, 2016

கொஸ்கம, சாலாவ இராணுவ முகாமில் ஏற்பட்ட தீ பரவல் முழுமையாக கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளாத இராணுவ தளபதி மேஜர் ஜெனரல் கிரிஷாந்த டி சில்லா தெரிவித்துள்ளார்.

சாலாவ இராணுவ முகாமிற்கு நேற்று மாலை விஜயம் செய்த நிலையில் அவர் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார். முன்னதாக சாலாவ இராணுவ முகாமில் பாரிய தீ விபத்து ஒன்று ஏற்பட்டது. இதன் காரணமாக இராணுவ முகாமை சூழவுள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்நிலையில் தீ பரவல் காரணமாக பொதுச் சொத்துக்கள் பலவற்றிற்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், வேறு பாரியளவிலான சம்பவங்கள் எதுவும் பதிவாகியுள்ளதா என்பது தொடர்பான விசாரணைகளையும் இராணுவத்தினர் மேற்கொண்டுள்ளனர்.

இதேவேளை, இராணுவ முகாமினைச் சூழவுள்ள பகுதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் அமுல்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


எந்தவொரு நோயாளியும் சங்கடத்துக்கு ஆளாகக்கூடாது - சுகாதாரப் பிரிவு பிரதானிகளுக்கு ஜனாதிபதி பணிப்பு!
பொருளாதார நெருக்கடிகள் எவ்வாறாயினும் இந்த வருடத்திற்கு தேவையான மருந்துகளை கொள்வனவு செய்வதற்கு நிதி ஒ...
அந்தியேட்டி கிரியை நடைபெறவிருந்த வீடொன்றில் 135 பவுணுக்கும் அதிகமான தங்க நகைகள் திருட்டு – பொலிசார் ...