தேர்தல் ஆணையாளர் – சபாநாயகர் அவசர கோரிக்கை!
Saturday, February 17th, 2018
தேவையேற்பட்டால் சில உள்ளூராட்சி மன்றங்களில் 25 சதவீத பெண் பிரதிநிதித்துவ எல்லை தொடர்பில் சில சீர்த்திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டி ஏற்படும் என தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய , சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு அறிவித்துள்ளார்.
இன்று நாடாளுமன்றில் சபாநாயகரை சந்தித்த போது அவர் இதனை தெரிவித்துள்ளார். அதேபோல் , எதிர்வரும் வாரம் இடம்பெறவுள்ள அரசியலமைப்பு சபைக்கு இது தொடர்பில் அறிவிக்குமாறும் தேர்தல் ஆணையாளர் சபாநாயகரிடம் கோரியுள்ளதாக சபாநாயகர் அலுவலகம் குறிப்பட்டுள்ளது.
அதனுடன் தொடர்புடைய அறிக்கையொன்றை அனுப்பி வைக்குமாறு சபாநாயகர் இதன்போது தேர்தல் ஆணையாளரிடம் தெரிவித்துள்ளார்.
Related posts:
ஊடகத்துறை அமைச்சுக்கான காணி கொள்வனவுக்கு அமைச்சரவை அனுமதி!
மத்திய வங்கியின் நாணயத்தாள் குறித்த அறிவிப்பு!
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தினால் திறைசேரிக்கு மூன்று பில்லியன் ரூபாய் அன்பளிப்பு!
|
|
|


