பாராளுமன்றத்தைக் கலைத்தால் 70 எம்.பிக்களுக்கு ஓய்வூதியமில்லை!
Friday, February 16th, 2018
பாராளுமன்றத்தை இடையில் கலைத்தால் இம்முறை முதல் தடவையாக பாராளுமன்றத்துக்குத் தெரிவாகிய 70 எம்.பிக்களுக்கு ஓய்வூதியம் பெறும் வாய்ப்பு இல்லாமல் போகும் என அரசியல் வட்டாரங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
இதனால் பாராளுமன்றத்தை எதிர்வரும் இரண்டு வருடங்கள் கலைக்காமல் கொண்டு சென்று ஐந்து வருடத்தை முழுமையாக்க வேண்டும் என்பதே இந்த 70 உறுப்பினர்களின் எதிர்பார்ப்பு என தெரிவிக்கப்படுகின்றது. ஒருவர் பாராளுமன்றத்துக்கு தெரிவாகி ஐந்து வருடங்களை நிறைவு செய்வாராயின் அவருக்கு
அவர் பெற்ற சம்பளத்தில் மூன்றில் ஒரு பங்கு ஓய்வூதியமாக வழங்கப்படுகின்றது. பாராளுமன்றத்திலுள்ள ஒரு உறுப்பினருக்கு கொடுப்பனவுகள் தவிர்ந்த மாதாந்த சம்பளமாக 5428 ரூபா வழங்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
2 மாதங்களுக்குள் மரண தண்டனை – அதிர்ச்சியில் போதைப்பொருள் குற்றவாளிகள்!
புதிய அரசியலமைப்புக்காகவே மக்கள் ஜனாதிபதிக்கு அதிகாரம் அளித்துள்ளனர் - மகா சங்கத்தினர் தெரிவிப்பு!
இரண்டு மில்லியன் டோஸ் கொரோனா தடுப்பூசியை பெற்றுக்கொள்ள முற்பதிவு - இராஜாங்க அமைச்சின் செயலாளர் அமல் ...
|
|
|


