யால தேசிய பூங்காவின் மூலம் 700.58 மில்லியன் ரூபா வருமானம்!
Friday, February 16th, 2018
கடந்த ஆண்டில் யால தேசிய பூங்காவின் மூலம் 700.58 மில்லியன் ரூபா வருமானம் பெறப்பட்டிருப்பதாக நிலைபெறா அபிவிருத்தி மற்றும் வனஜீவராசிகள் அமைச்சுதெரிவித்துள்ளது.
இங்கு விஜயம் செய்துள்ள சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 397,122 எனவும் இவர்களுள் 207,927 பேர் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளாவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை உடவளவ தேசிய பூங்காவின் மூலம் கடந்த வருடத்தில் 358.44 மில்லியன் ரூபா வருமானம் பெறப்பட்டுள்ளதுடன் 236867 சுற்றுலாப்பயணிகள் இங்கு விஜயம்செய்துள்ளனர்.
ஹோட்டன் தென்ன தேசிய பூங்காவின் மூலம் 361.09 மில்லியன் ரூபா வருமானம் பெறப்பட்டுள்ளதுடன் 345,480 சுற்றுலாப்பயணிகள் இங்கு விஜயம் செய்துள்ளதாகதெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
உள்ளுராட்சி சபை உறுப்பினர்கள் விலகல் தெரிவத்தாட்சி அலுவலருக்கு அறிவிக்க வேண்டும்!
தோல்வியடைந்த நாட்டை வெற்றிப் பாதைக்கு உயர்த்துவதே எமது முயற்சி - ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவிப்...
ஜனாதிபதி அதிகாரத்தை பயன்படுத்தினால் முதலில் பொதுத் தேர்தல் நடைபெறுவதற்கு வாய்ப்பு - தேர்தல்கள் ஆணைக்...
|
|
|


