கிரிக்கெட் எதிர்காலம் குறித்து ரங்கன ஹேரத்தின் தீர்மானம்!
Wednesday, February 14th, 2018
கிரிக்கெட் எதிர்காலம் குறித்து தீர்மானம் ஒன்றினை மேற்கிந்திய சுற்றுப்பயணத்தின் பின்னர் தான் முன்னெடுக்கவுள்ளதாக இலங்கை அணியின் இடதுகை ஸ்பின் பந்துவீச்சாளர் ரங்கன ஹேரத் தெரிவித்துள்ளார்.
இவர் பங்களாதேஷ் சுற்றுப்பயணத்தினை நிறைவு செய்து நாடு திரும்பிய நிலையில் விமான நிலையத்தில் வைத்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இவர் பங்களாதேஷ் சுற்றுப்பயணத்தின் போது இடதுகை பந்து வீச்சாளராக அதிக விக்கெட்களைக் கைப்பற்றி சாதனை படைத்திருந்தார்.
மேலும் இவர் இடதுகை பந்துவீச்சில் 415 விக்கெட்களை கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
பதிய டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் தரவரிசை விபரம்!
டெஸ்ட் தரவரிசையில் முதலிடம் பிடித்து பாகிஸ்தான்!
மோசமான வரலாற்று சாதனை
|
|
|


