சுமார் 66 ஆயிரம் பொலிசார் தேர்தல் கடமையில் ஈடுபடுவார்கள்!

Thursday, February 8th, 2018

எதிர்வரும் 10 ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சி தேர்தலுக்கான பாதுகாப்பு கடமைகளில் சுமார் 66 ஆயிரம் பொலிசார் ஈடுபடுவார்கள் என்று பொலிஸ் ஊடகப்பேச்சாளர் எஸ்.பி. நுவன் குணசேகர கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்துள்ளார்.

இவர்களுடன் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தைச் சேர்ந்த ஆறாயிரம் பேர் கடமைகளில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும் வாக்களிப்புக்குப் பின்னர் முப்படைகளை கடமையில் ஈடுபடுத்துவதென தீர்மானிக்கப்பட்டுள்ளது. தேவை ஏற்படின் விசேட அதிரடிப்படையினரின் சேவையைப்பெறலாம் என தேர்தல்கள் ஆணைக்குழு ஆலோசனை வழங்கியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts:

அரச நிறுவனங்கள் பொதுமக்களுக்கான சேவைகளை செயற்திறனாக மேற்கொள்ள வேண்டும் – பிரதமர் வலியுறுத்து!
மாத இறுதியில் சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகள் நிறைவடையும் - பிரதமர் ரணில் தெரிவிப்பு!
மன்னாரில் மற்றுமொரு புதிய காற்றாலை - கேள்விப்பத்திரங்களைக் கோரவுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அம...