தமிழினியின் கணவருக்கு உயிராபத்து?
Saturday, June 4th, 2016
புலிகளின் மகளிர் அணி முன்னாள் பொறுப்பாளரான தமிழினியின் கணவர் ஜெயகுமார் மஹாதேவன், தமது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார் என செய்திகள் தெரிவிக்கின்றன.
2009ஆம் ஆண்டு இடம்பெற்ற இறுதிப்போரின் போது நிகழ்ந்தமை தொடர்பில் தமிழினியின் நூல்கள் வெளியிடப்பட்டமையை அடுத்தே இந்த அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
புலம்பெயர்ந்த தமிழர்களின் ஒருப்பிரிவினரே இந்த அச்சுறுத்தலை விடுத்துள்ளதாக ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.தமிழினியின் நூல்களை சிங்கள மொழியில் மொழிப்பெயர்க்கப்பட்டுள்ள நிலையில்அவற்றை ஆங்கில மொழியிலும் வெளியிட நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன என்று ஜெயகுமார் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
இலவச பாடநூல்கள் அச்சிடும் நடவடிக்கைகள் ஆரம்பம் - கல்வி அமைச்சர் ஜி.எல். பீரிஸ்!
இப்ராஹிம் ரைசியின் இறுதிக்கிரியைகள் இன்று - ஈரானிய ஜனாதிபதியின் திடீர் மறைவுக்கு இலங்கையில் துக்க த...
உள்ளுராட்சி தேர்தலுக்காக தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் குறித்து நாடாளுமன்றமே தீர்மானம் எடுக்க வ...
|
|
|


