காணாமல் போனோர் அலுவலகம் அமைக்க அமெரிக்கா உதவி!
Saturday, June 4th, 2016
இலங்கையில் அமைக்கப்படவுள்ள காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்துக்கு, அமெரிக்கா உதவிகளை வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
அமைச்சர் மகிந்த சமரசிங்க கொழும்பில் வைத்து இதனைத் தெரிவித்துள்ளார்.
காணாமல் போனோர் தொடர்பான பிரச்சினைகளை தீர்ப்பதற்கான பொறிமுறையாக, இந்த அலுவலகத்தை நியமிக்க அமைச்சரவை அனுமதி வழங்கி இருக்கிறது. இதன்படி விரைவில் இந்த அலுவலகம் அமைக்கப்படும். இதன் ஊடாக காணாமல் போனோரை கண்டுபிடிக்கவும், குடும்பங்களை மீளிணைக்கவும் அமெரிக்கா உதவிகளை வழங்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்
Related posts:
நேபாள ஜனாதிபதி இலங்கை வருகை!
எரிபொருள் பற்றாக்கறை – யாழ்ப்பாணத்திலும் முடங்கிவரும் பொதுப் போக்குவரத்து சேவைகள் - அவதியுறும் மக்கள...
55 கருத்திட்ட அலகுகளை முடிவுறுத்த அரசாங்கம் தீர்மானம் - ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமை...
|
|
|


