மீண்டும் தலைதூக்குகின்றது டெங்கு – 30 நாட்களுக்கள் 6203 போர் பாதிப்பு
Saturday, February 3rd, 2018
நாட்டில் மீண்டும் டெங்கு நோய் தீவிரமாகப் பரவி வருகின்றது ஜனவரி மாதத்தில் மாத்திரம் 6ஆயிரத்து 203 பேர் டெங்குவால் பாதிக்கபட்டுள்ளனர் என்று சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது இடையிடையே பெய்யும் மழை காரணமாகவே டெங்கு நோய் வேகமாக பரவ ஆரம்பித்துள்ளது என்ற சுட்டிக்காட்டப்பட்டுள்ளது டெங்கு நுளம்பு பெருகாத வகையில் சுற்றாடலை சுத்தமாக வைத்துக் கொள்ளுமாறு மக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர் கடந்த ஆண்டு இலங்கைக்கு டெங்குவால் பெரும் அச்சுறுத்தல் எற்பட்டது சுமார் ஒரு லட்சம்பேர் வரையானோர் பாதிக்கப்பட்டனர் அதன் பின்னர் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது
Related posts:
இவ்வருடம் வவுனியாவில் மழை வீழ்ச்சியில் பாரிய பின்னடைவு!
ஓய்வூதிய நடைமுறையிலான பலன்களை உழைக்கும் அனைத்து மக்களுக்கும் உரித்தாவதற்கு நடவடிக்கை - ஓய்வூதிய திணை...
இலங்கையின் கடற்பகுதி தீவிர பாதுகாப்பில் - வேறு நாட்டவர்களுக்கு உதவினால் கைது!
|
|
|


