போதையில் சாரத்தியம் இருவருக்கு ரூ. 6000 தண்டம்!
Tuesday, January 23rd, 2018
மதுபோதையில் வாகனம் செலுத்திய இரு சாரதிகளுக்கு தண்டத்துடன் சாரதி அனுமதிப் பத்திரத்தையும் இரு வாரங்களுக்கு நிறுத்தி வைத்தது கிளிநொச்சி மாவட்ட நீதிவான் மன்று.
கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் மது போதையுடன் வாகனத்தை செலுத்தினார்கள் என இருவர் கைது செய்யப்பட்டனர். இரு சாரதிகளையும் பொலிஸார் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தினர். இருவரும் குற்றத்தை ஒப்புக் கொண்டதன் காரணத்தால் இருவருக்கும் தலா 6000 ரூபா தண்டம் விதிக்கப்பட்டது. சாரதி அனுமதிப்பத்திரங்களை இரு வாரங்களுக்கு இடைநிறுத்தி வைத்து தீர்ப்பளித்தது நீதிவான் மன்று.
Related posts:
மினுவாங்கொட போன்று மற்றுமொரு கொரோனா கொத்தணி ஏற்படும் ஆபத்து - எச்சரிக்கும் இராணுவ தளபதி!
இஸ்ரேலில் வேலைக்குச் செல்லும் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு - அமைச்சர் மனுஷ நாணயக்கார தகவல்!
சாதாரண தரப் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் முதலாம் திகதிமுதல் ஆரம்பம் - பரீட்சைகள் திணை...
|
|
|


