மொழி ஆற்றல்களை விருத்தி செய்ய ஆங்கில பாடம் அறிமுகம்!
Saturday, January 20th, 2018
அரச பாடசாலைகளில் மொழி ஆற்றலை விருத்தி செய்யும் நோக்குடன் தரம் ஒன்று தரம் இரண்டுக்குரிய வகுப்புக்களில் ஆங்கில பாடத்தை அறிமுகம்செய்வதென கல்வியமைச்சு தீர்மானித்துள்ளது.
இதற்கு தேவையான பாடப் புத்தங்களை அச்சிட்டு விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி வெளியீட்டு ஆணையாளர் பத்மினி நாலிக்காவெலிவத்த தெரிவித்துள்ளார்.
இத்திட்டம் கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசத்தின் எண்ணக்கருவுக்கு அமைவாக இவ்வாண்டு ஆரம்பிக்கப்பட்டு அடுத்த வருடம் முழுமையாகஅமுல்படுத்தப்படவுள்ளது.
மேலும் முதலாம் இரண்டாம் வகுப்புக்களை சேர்ந்த பிள்ளைகளுக்கு விசேட செயற்பாடுகள் மூலம் ஆங்கில பாடம் போதிக்கப்படவுள்ளது. இதற்காகஆசிரியர்களுக்கு விசேட பயிற்சி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Related posts:
2000 ரூபா நிவாரண பணம் கிடைக்காதவர்கள் பிரதேச செயலாளர்களிடம் முறையிடலாம் - பொருளாதார மறுமலர்ச்சி மற்ற...
இந்தியா – இலங்கை - இடையிலான இருதரப்பு உறவுகள் மேலும் பலப்படுத்தப்படும் - இந்திய உயர்ஸ்தானிகர் கோபால்...
நெல் கொள்வனவுக்கான நிதி ஒதுக்கீடு இரட்டிப்பு - 20 பில்லியனாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர...
|
|
|


