இரத்த தானம் செய்யுமாறு இரத்த வங்கி வேண்டுகோள்!

Wednesday, January 10th, 2018

 

தேசிய இரத்த பரிமாற்ற மையம் இரத்த தானம் செய்யுமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

ஒவ்வொரு வருடமும் சேமித்து வைத்துள்ள இரத்த அளவானது டெங்கு மற்றும் ஏனைய நோய்களால் குறைந்துள்ளதாகவும் அதனால் இரத்த தானம் செய்ய முன்வருமாறும் குறித்தமையத்தின் அத்தியட்சகர் டாக்டர்.ருக்ஷான் பெள்ளன தெரிவித்துள்ளார்.

மேலும் இது குறித்து தெரிவிக்கையில்;

ஒவ்வொரு வருடமும் ஜனவரி முதல் ஏப்ரல் வரையான காலப்பகுதியில் இரத்த தானம் வழங்குவது குறைவு. இதனாலேயே இரத்தத்திற்கு தட்டுப்பாடு நிலவுவதாக தெரிவித்திருந்தார்.

நாரஹேன்பிடிய தேசிய இரத்த பரிமாற்ற மையத்தினூடாக அல்லது அருகிலுள்ள வைத்தியசாலையின் இரத்த மையத்தில் இரத்த தானம் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும்பொதுமக்களிடம் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts:

முதலாம் தரத்துக்கான மாணவர் அனுமதி: சுற்றறிக்கையை அதிபர்கள் மீற முடியாது  என கல்வி அமைச்சர் காரியவசம்...
தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் புதிய தலைவராக கலாநிதி ஆனந்த விஜேவிக்ரம நியமனம்!
மக்கள் மீது எவ்வித வரிச் சுமைகளையும் ஏற்றாது, நாட்டின் வருமானத்தை 50 வீதமாக அதிகரிக்க முடியும் - நாட...

ஒவ்வொரு முன்பள்ளிப் பாடசாலை அபிவிருத்திக்கும் 6 இலட்சம் ரூபா ஒதுக்கீடு - இராஜாங்க அமைச்சர் பியல் நிஷ...
சவால்களுக்கு மத்தியில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டிய தருணமிது. - சுதந்திர தின வாழ்த்துச்...
துருக்கிக்கு ஒரு மாத காலக்கெடு - உறவுகளைத் துண்டிக்கப்போவதாக உகாண்டா இராணுவ தளபதி எச்சரிக்கை!