அரச முகாமை உதவியாளர் போட்டிப் பரீட்சையின் முடிவுகள் வெளியீடு!
Friday, December 8th, 2017
அரச முகாமை உதவியாளர் சேவைக்கான போட்டிப் பரீட்சையின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளதாக பொதுநிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.
திறந்த போட்டிப் பரீட்சைக்கான பெறுபேறுகள் விரைவில் வெளியாகும். இந்தப் பரீட்சைகளுக்கு மொத்தம் 68 ஆயிரத்திற்கும் அதிகமான பரீட்சார்த்திகள் தோற்றினர். இவர்களுள்ஆயிரத்து 377 பேருக்கு நூற்றுக் நூறு புள்ளிகள் கிடைத்திருப்பதாக அமைச்சின் அரச கூட்டுச் சேவைப் பணிப்பாளர் நாயகம் கே.வீ.பீ.எம்.ஜீ.கமகே தெரிவித்துள்ளார்.
தற்போது அரச முகாமைத்துவ சேவையில் ஆறாயிரத்து 139 வெற்றிடங்கள் காணப்படுகின்றன. இதனை நிரப்புவதற்கான அனுமதி திறைசேரியிடம் இருந்து கிடைக்கப்பெற்றுள்ளது. அடுத்த வருட முதற்காலாண்டுப் பகுதிக்குள் இந்த வெற்றிடங்கள் நிரப்பப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Related posts:
உயர்தரத்தில் பயில கணிதபாடச் சித்தி அவசியமில்லை!
அனைத்து கதவுகளும் திறந்தே இருக்கின்றன - ஜனாதிபதி!
ஜூனில் 27 ஆயிரத்து 937 பேர் தொழிலுக்காக வெளிநாடு சென்றுள்ளனர் - இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக...
|
|
|
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் 9000 பேர் பாதிப்பு - அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தகவல்!
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கரங்களை பலப்படுத்த தயார் - நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் தெரிவி...
2019 ஆம் ஆண்டுவரை நடைமுறையிலிருந்த வரி விதிப்பு முறைமை இல்லாது செய்யப்பட்டமையே நெருக்கடிக்கு காரணம் ...


