ஜனவரி முதல் பொலிதீனுக்கு தட்டுப்பாடு!
Thursday, December 28th, 2017
லஞ்ச் சீட் மற்றும் பொலிதீன் பை குறித்த தகனம் நடைமுறைக்கு வர இன்னு சில நாட்களே உள்ள நிலையில், பொலிதீனுக்கு தட்டுப்பாடு நிலவ அதிக வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது குறித்து அகில இலங்கை பொலிதீன் உற்பத்தியாளர்கள் மற்றும் மீள் உற்பத்தி செய்வோரின் சங்கமின் செயலாளர் அநுர ஹேரத் தெரிவிக்கையில்;
“௪ முதல் சில மாதங்களுக்கு பொலிதீன் தட்டுப்பாடு நிலவ அதிக வாய்ப்புகள் உள்ளது. புதிய திரவியங்களை இலங்கைக்கு கொண்டு வர நாம் முன்னர் செலவு செய்ததை போன்று நான்கு அல்லது ஐந்து மடங்கு பணம் செலவாகிறது. ஆதலால் எல்லா பொலிதீன் உற்பத்தியாளர்களுக்கும் குறித்த செலவினை தாக்குப் பிடிக்க முடியாது. ஆதலால் ஜனவரி 01ம் திகதி முதல் கடைகளில் பொலிதீன் தட்டுப்பாடு நிலவ அதிக வாய்ப்பு உள்ளது..” என தெரிவித்துள்ளார்.
Related posts:
பொருளாதாரத்தில் நலிவடைந்துள்ள மக்களுக்கு எம்மாலான உதவிகளை பெற்றுக்கொடுக்க முயற்சிப்பேன் - ஈ.பி.டி.ப...
நியூயோர்க் சென்றடைந்தார் ஜனாதிபதி ரணில் - நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளை அடைவது தொடர்பில் உரை!
2000 ற்கும் மேற்பட்ட அரசாங்க வாகனங்கள் மாயம்!
|
|
|


