ஶ்ரீலங்கா எயார்லைனஸ் குறித்து விசாரிக்க ஜனாதிபதி ஆணைக்குழு!
Sunday, December 24th, 2017
மிகின் லங்கா மற்றும் ஶ்ரீலங்கா எயார்லைனஸ் நிறுவனங்களில் இடம்பெற்றதாக கூறப்படும் நிதி மோசடி குறித்து விசாரிப்பதற்கு ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.
இலங்கை மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி சம்பந்தமாக விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கை கிடைத்த பின்னர் இந்தக் குழு நியமிக்கப்படும் என்று ஜனாதிபதி கூறியுள்ளார்.
பிணைமுறி மோசடி சம்பந்தமாக விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை இம்மாதம் 31ம் திகதி கிடைக்கப் பெறும் என்று அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தார்
Related posts:
சிலோன் டீ யை சீனாவில் விற்பனை செய்ய இலங்கை – சீனா இடையே ஒப்பந்தம் கைச்சாத்து!
ஒரு இலட்சத்து 94 ஆயிரத்து 297 பேர் பல்கலைக்கழகங்களுக்கு தகுதி - பரீட்சைத் திணைக்களம் தெரிவிப்பு!
எந்தவொரு பயங்கரவாதத் தடைச்சட்டமும் எங்களுக்குத் தேவையில்லை - யாழ். பல்கலைச் சமூகம் போராட்டம்!
|
|
|


