துப்பாக்கி சூட்டில் இருவர் பலி !
Monday, May 30th, 2016
குருணாகல் பன்னல வெட்டகாய பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கச்சூட்டு சம்பவத்தில் பெண்ணொருவர் உட்பட இருவர் பலியாகியுள்ளனர்.
இந்த சம்பவத்தில் மற்றுமொரு பெண் பலத்த காயத்திற்குள்ளாகி சந்தளங்காவ வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
குறித்த பகுதியில் உள்ள பஸ் நிலையமொன்றில் வைத்தே இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கோள்ளப்பட்டுள்ளது.
துப்பாக்கி பிரயோகத்திற்கு ரி 56 ரக துப்பாக்கிகள் பயன்படுத்தப்ட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர்களில் குறித்த ஆண் மணல், மற்றும் களிமண் மோசடிகளில் ஈடுபட்டதற்கான முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பன்னல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Related posts:
பிறந்தநாள் வீட்டில் உணவுண்ட 10பேர் வைத்தியசாலையில் அனுமதி- கரணவாய் கொற்றாவத்தையில் சம்பவம்!
சுதந்திர தினத்தை முன்னிட்டு 619 கைதிகளுக்கு விடுதலை!
நவீனமயமாக்கப்பட்ட விவசாயத்தின் மூலம் நாட்டின் பொருளாதாரம் கட்டியெழுப்பப்படும் - ஜனாதிபதி ரணில்!
|
|
|
கொவிட் தொற்று காரணமாக குழந்தை பிறப்பு விகிதம் பாரிய அளவில் வீழ்ச்சி - இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி...
குறிகாட்டுவான் இறங்குதுறை வலுவிழப்பு - கனரக வாகனங்கள் பயணிப்பது ஒரு வாரத்துக்கு இடைநிறுத்தப்பட்டுள்ள...
தலசீமியா நோய் - இளைஞர் யுவதிகள் திருமணத்திற்கு முன் முழு இரத்தப் பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும் - சுக...


