93 உள்ளூராட்சி சபைகளுக்கு இன்று தொடங்குகிறது வேட்புமனுத் தாக்கல் !
Monday, December 11th, 2017
இலங்கையில் 93 உள்ளூராட்சி சபைகளுக்கு இன்று வேட்புமனு தாக்கல் ஆரம்பமாகவுள்ளது. முதல் கட்டமாக வேட்புமனுக்கள் கோரப்பட்ட சாவகச்சேரி நகரசபை உள்ளிட்ட 93 உள்ளூராட்சி சபைகளுக்கு நாளை வேட்புமனுத் தாக்கல் ஆரம்பமாகிறது.
எதிர்வரும் 14ஆம் திகதி நண்பகல் 12 மணி வரை வேட்புமனுக்களைத் தாக்கல் செய்ய முடியும் என்று தேர்தல்கள் ஆணையகம் அறிவித்துள்ளது.
வேட்புமனுத் தாக்கல் முடிந்த பின்னர், தேர்தல் நடைபெறும் திகதி மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகளால் வெளியிடப்படும்.வேட்புமனுத் தாக்கல் இடம்பெறும் காலகட்டத்தில் மாவட்டச் செயலகங்களில் பாதுகாப்பை அதிகரிக்குமாறு, தேர்தல்கள் ஆணையகம் பொலிஸாரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
Related posts:
முதன்முதலில் 3 மேல்நீதிமன்ற நீதிபதிகளுடன் வித்தியா கொலை வழக்கு விசாரணை!
பரீட்சை வினாத் தாள் தாமதம் - யாழ் கல்வி வலயப் பாடசாலைகளில் குழப்பம்!
அரபு மொழியிலுள்ள பெயர்ப்பலகைகளை உடனடியாக நீக்குவதற்கான சுற்றுநிருபம் வெளியீடு!
|
|
|
பிரதமரின் தலைமையில் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் இரண்டாவது முனைய திட்டத்திற்கான பணிகள் ஆரம...
ஐநா மனித உரிமைகள் பேரவையின் 51 ஆவது கூட்டத்தொடர் ஆரம்பம் – இலங்கையின் நிலைப்பாடு தொடர்பில் இன்றைய அம...
கொள்முதல் செய்யப்படும் நெல்லினை அரிசியாக மாற்றி 29 இலட்சம் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு ...


