உறவுகளை நினைத்து உணர்வுகளை வெளிப்படுத்து வதற்கு எவரும் தடையாக இருக்கக்கூடாது – நாடாளுமன்றில் டக்ளஸ் M.P. வலியுறுத்து!

Saturday, November 25th, 2017

யுத்தம் காரணமாக உயிரிழந்த உறவுகளை எமது மக்கள் நினைவு கூறுகின்றார்கள். இந்த நிகழ்வு வடக்கிலும், தெற்கிலும் சில அரசியல்வாதிகளின் சுயலாபம் கருதி அரசியலாக்கப்படுகின்றது.

இது, அரசியல் மேடை அல்ல. உறவுகளைப் பலிகொடுத்த எமது மக்களின் உணர்ச்சிகளை வெளிப்படுத்துகின்ற, கல்லறைகள் தவிர்ந்த ஒரு வெற்று வெளி. வெறுமை. அந்த மக்களுக்கு எதுவுமற்ற வெறுமை. அந்த வெற்று வெளியில் எமது மக்கள் தங்களது உணர்வுகளைக் கொட்டித் தீர்க்கின்றனர். இதற்கென ஒரு தினத்தைப் பிரகடனப்படுத்தும் படியும், பொது நினைவுத்தூபி ஒன்றை அமைக்கும்படியும் நான் இந்தச் சபையிலே தனிநபர் பிரேரணையொன்று கொண்டு வந்திருந்தேன்.

அதற்கான அங்கீகாரம் கிடைத்தது. அந்த அங்கீகாரம், செயல்வடிவம் பெறும் வரையில் எமது மக்களுக்கு தங்களது உறவுகளை நினைத்து உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கு இடம்கொடுங்கள். அதற்கு எவரும் தடையாகவோ இடையூறாகவோ இருக்கக்கூடாது எனக் கேட்டுக் கொள்கின்றேன்.

இத்தகைய விடயங்களை மேற்கொள்வதில் தடைகள் இருக்கக்கூடாது. அதற்கான வழிகளில் திறந்துவிடப்பட வேண்டும். இதன் மூலமும் சர்வதேசத்தில் எமது நாடு குறித்து இருக்கின்ற கறைகள் நீங்கும் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியுள்ளார்.

இன்றையதினம் (25.11.2017) போக்குவரத்து, சிவில் விமான சேவைகள் மற்றும் வெளிவிவகாரம், அபிவிருத்திப் பணிப் பொறுப்பு ஆகிய மூன்று அமைச்சுக்கள் தொடர்பிலான குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்

Related posts:

அனுராதபுரம் சிறையில் சந்தேகநபர் தாக்குதல் பின்னணியில் அரசியல் காரணங்கள் உண்டா? சபையில் டக்ளஸ் தேவானந...
பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் தொடருவதற்கு நீங்கள்தான் காரணம்: மக்கள் மீது குற்றச்சாட்டினார் அமைச்சர் ...
கலமிட்டிய மற்றும் வெல்லமன்கர பிரதேசங்களில் உருவாக்கப்பட்ட மீன்பிடித் துறைமுகங்கள் அமைச்சர் டக்ளஸ் தே...

நிறுவனமும் சூழலும் வலுப்பெற நடவடிக்கை எடுக்கப்படும் - குருநகர் உயர் தொழில் நுட்பக் கல்லூரியில் அமைச்...
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் வடமாராட்சி வடக்கு மற்றும் கிழக்கு கடற்றொழிலாளர்கள் விஷேட கலந்துரையாடல...
யாழ் புகையிரத அத்தியட்சராக பதவியேற்றுள்ள சுரேந்திரன், சம்பிரதாயபூர்வமாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை...