O/L பரீட்சையில் இம்முறை 688,573 பேர் தோற்றுவர்!
Wednesday, November 22nd, 2017
இவ்வருடம் நடைபெறவுள்ள கல்விப்பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்கு நாடு பூராகவுமிருந்து மொத்தமாக 688,573 பேர் தோற்றவுள்ளனர்.
பாடசாலை பரீட்சார்த்திகளாக 429,493 பேரும் தனிப்பட்ட பரீட்சார்த்திகளாக 259,080 பேரும் தோற்றவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார். அத்துடன் மேற்படி பரீட்சை 5116 நிலையங்களில் இடம்பெறவுள்ளது.
3762 நிலையங்களில் புதிய பாடத்திட்ட அடிப்படையிலான பரீட்சையும் 1354 நிலையங்களில் பழைய முறையிலான பரீட்சையும் இடம்பெறவுள்ளது. மேலும் புதிய பாடத்திட்ட இணைப்பு நிலையங்களாக 536 உம் பழைய பாடத்திட்ட நிலையங்களாக 487 உம் செயற்படவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் பி.ஜனத்பூஜித தெரிவித்துள்ளார்.
Related posts:
இலங்கையில் சமூக பரவலாக மாறும் கொரோனா தொற்று - இன்றுமுதல் மீண்டும் அமுலுக்கு வருகிறது ஊரடங்குச் சட்ட...
செழிப்பான நாளை வளமான தாய்நாடு’ - இலங்கையின் 73ஆவது சுதந்திர தினத்தை கொண்டாட தீர்மானம் - இராஜாங்க அம...
500 மில்லியன் யுவான் உதவியின் கீழ் சீனாவில் இருந்து முதல் தொகுதி அரிசி நாட்டை வந்தடைந்தது - சீன வெளி...
|
|
|


