10 இந்திய மீனவர்கள் கைது!
Thursday, November 16th, 2017
அத்துமீறி மீன்பிடியில் ஈடுப்பட்ட 10 இந்திய மீனவர்களை பருத்தித்துறை கடற்பரப்பில் நேற்று(15) இரவு கடற்படையினர் கைதுசெய்து யாழ் நீரியல் வளத்திணைக்கள அதிகாரிகளிடம் இன்று(16) கையளித்துள்ளனர்.
குறித்த மீனவர்கள் ஒரு படகுடன் கைது செய்யப்பட்டதாக கடற்படையினர் தெரிவிக்கின்றனர்.
குறித்த இந்திய மீனவர்கள் ஜகாதாப்பட்டிணம், தங்கட்சி மடம் ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், இவர்களை இன்றைய தினம் பருத்தித்துறை நீதிமன்றத்தில் ஆஜராக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் யாழ் நீரியல் வளத்திணைக்கள உதவிப்பணிப்பாளர் சுதாகர் தெரிவித்தார்
Related posts:
கொரோனா வைரஸ் எதிரொலி: இதுவரை இலங்கையில் 900 பில்லியன் ரூபா நட்டம்!
முகநூலில் மலிவான விலை பொருட்களை பெற்றத்தருவதாக கூறி பணம் பறிக்கும் கும்பல்!
2022 இல் கடன் அட்டைகளின் பயன்பாடு அதிகரிப்பு - மத்திய வங்கி அறிக்கை சுட்டிக்காட்டு!
|
|
|


