தபால் விநியோக பணியாளர்களுக்கு சைக்கிள்கள்!

Wednesday, November 15th, 2017

வடக்கு மாகாணத்தில் உள்ள தபால் விநியோக பணியாளர்களுக்கு சைக்கிள்கள் வழங்கப்படவுள்ளன. இதற்கென 583 சைக்கிள்களை தபால் தொலைத்தொடர்புகள் அமைச்சு வடக்கிற்கு அனுப்பி வைத்துள்ளன.

ஐந்து மாவட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட சைக்கிள்களை அனுப்பி வைக்கவும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணத்திற்கு 269, கிளிநொச்சி 94, வவுனியா 83, மன்னார் 80, முல்லைத்தீவு 57 என ஒதுக்கப்பட்டுள்ளன.

யாழ். மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட 269 சைக்கிள்களும் நேற்று அதிகாலை கனரக வாகனம் மூலம் கொண்டு வரப்பட்டன. இந்த சைக்கிள்கள் யாழ். பிரதம தபாலகத்தினால் மாவட்டத்தில் உள்ள சகல தபால் விநியோக பணியாளர்களுக்கும் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.

கடந்த ஆண்டு வழங்கப்பட வேண்டிய இந்த சைக்கிள்கள் இவ்வருடமே வழங்கப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு தபால் விநியோக பணியாளர்களுக்கும் குறிப்பாக ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை தபால் அமைச்சினால் இந்த சைக்கிள்கள் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

தம்பலகாமம் பிரதேச மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் ஈ.பி.டி.பியின் விஷேட குழுவினர் பிரதேச ...
இந்திய கடன் உதவிகளை மேலும் பெற்றுக் கொள்வது குறித்து ஆலோசனை - நிதி அமைச்சர் அலி சப்ரி தெரிவிப்பு!
இலங்கையின் கடன் மறுசீரமைப்பு! இந்தியாவில் பதில் விரைவில் - ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவிப்பு!