அமெரிக்கா – இலங்கை ஒத்துழைப்பு அறிக்கை!
Tuesday, November 7th, 2017
இலங்கைக்கு வருகை தந்துள்ள அமெரிக்காவின் உதவி இராஜாங்க செயலாளர் தோமஸ் செனன் மற்றும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் பிரசாத் காரியவசத்திற்கும் இடையில் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இடம்பெற்ற இந்த சந்திப்பில், இரு நாடுகளுக்கிடையிலான ஜனநாயகம் சட்டவிதிகள் தொடர்பிலான கலந்துரையாடல் இடம்பெற்றது.
இந்த சந்திப்பை தொடர்ந்தும் இலங்கை வெளிநாட்டலுவல்கள் அமைச்சும் அமெரிக்க இராஜாங்க திணைக்களத்திற்கும் இடையிலான கூட்டு ஒத்துழைப்பு குறித்து அறிக்கை ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.
இலங்கைக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்துதல் தொடர்புகளை விரிவுபடுத்துதல் ஆகியவற்றுக்கான தொடர்ச்சியான கலந்துரையாடல் மற்றும் அடிப்படையான விடயங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.
Related posts:
பலாலி பாதுகாப்புத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் வெசாக் தின நிகழ்வு !
18 வயதுக்கு கீழ்ப்பட்டவர்களுக்கு கொவிட் தடுப்பூசி செலுத்த ஆலோசனை - இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமனதெரி...
ஐக்கிய அமெரிக்க பழைய மாணவர் நிதிப் பங்களிப்பு - யாழ். பல்கலை மருத்துவ பீடத்தின் தகவல் தொழில்நுட்ப கூ...
|
|
|


