இன்று நள்ளிரவுமுதல் புகையிரத பணியாளர்கள் சேவைப் பணிப்புறக்கணிப்பு!
Wednesday, November 8th, 2017
தாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை உள்ளடக்கிய பல கோரிக்கைகளை முன்வைத்து புகையிரத சங்கங்கள் பல இணைந்து இன்று (08) நள்ளிரவு முதல் 48 மணி நேரம் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.
ஏற்கனவே தமது கோரிக்கை தொடர்பில் அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்ட போதும் இதுவரை தமக்கு தீர்வு பெற்றுக் கொடுக்கப்படவில்லை என இலங்கை புகையிரத கட்டுப்பாளர்கள் சங்கத்தின் பிரதான செயலாளர் பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இந்நிலையிலேயே மேற்குறித்த இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். அண்மையில் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவிருந்த நிலையில், போக்குவரத்து பிரதியமைச்சர் அசோக அபேசிங்கவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலுக்கு பின்னர் பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
தனிநபர் சுயவிருப்பங்களுக்காக கூட்டப்படும் ஒருங்கிணைப்புக் குழு கூட்டங்களால் மக்களுக்கான விமோசனங்கள் ...
தபால் நிலையங்கள் அனைத்துக்கும் இணைய வசதி : அமைச்சர் பந்துல குணவர்தன!
வாக்காளர் அட்டைகளை பகிர்ந்தளிக்கும் நடவடிக்கை 29 ஆம் திகதியுடன் நிறைவு - தேர்தல்கள் ஆணைக்குழு!
|
|
|


