சர்வதேச மனிதநேய மாநாட்டின் இறுதி நாள் இன்று!
Tuesday, May 24th, 2016
முதலாவது சர்வதேச மனிதநேய மாநாட்டின் இறுதி நாள் இன்றாகும். துருக்கியின் இஸ்தான்புல் நகரில் இடம்பெறும் இந்த மாநாட்டில் ஐக்கிய நாடுகள் உறுப்புரிமை பெற்ற 150 நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தி 6000 பேர் பங்கேற்பதுடன் 57 நாடுகளின் அரச தலைவர்களும் குறித்த மாநாட்டில் கலந்து கொண்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட இடம்பெயர்ந்த மக்களுக்கு அவர்களின் வாழ்வாதாரங்களை சர்வதேச மனித நேய வழிமுறைக்கு அமைய சீரமைத்தல் அது தொடர்பிலான நிதியை உலக தலைமைகளிடம் திரட்டுதல் இந்த மாநாட்டின் நோக்கமாகும்.
இன்றைய நிறைவு நாள் நிகழ்வில் சர்வதேச பிரபலங்கள் மனித நேய செயற்பாட்டாளர்கள் மற்றும் சட்டத்தரணிகள் கலந்து கொண்டனர்.
Related posts:
தலவாக்கலையில் நாட்டாமிகாரர்கள் ஆர்ப்பாட்டம்
15ஆம் திகதி முதல் காத்திருப்பு பட்டியலிலுள்ள சமுர்த்தி பயனர்களுக்கான 5,000 ரூபா வழங்க ஏற்பாடு!
"பவானி" வீதி விடுவிப்பு - ஜூன் மாதம் 25ஆம் திகதி கட்டளை வழங்கப்படும் என திகதியிட்டது நீதி...
|
|
|


