கோப்பாயில் அணின் சடலம் மீட்பு: கொலையா? விபத்தா?? சந்தேகத்தில் பொலிஸார்!
Wednesday, November 1st, 2017
யாழ்ப்பாணம் கோப்பாய் கைதடி வீதியில் பாலத்தடியில் ஆண் ஒருவரின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
NpHP – 6340 இலக்க மோட்டார் சைக்கிளில் வந்த. சங்கத்தானை சாவகச்சேரியை வசிப்பிடமாக கொண்ட 3 பிள்ளைகளின் தந்தையான 49 வயதுடைய கனகரட்னம் கோணேஸ்வரன் வயது 49 இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டராவார். இவர் யாழ் சாவகச்சேரி சகலகலாவல்வி ஆரம்பபாடசாலை யின் ஆசிரியருமாவார். இவர் நேற்றிரவு 9 மணியளவில் தனது வீட்டிலிருந்து வெளியே சென்றதாக அவரது மனைவி தெரிவித்துள்ளார்.
சம்பவம் விபத்தா கொலையா தொடர்பாக கோப்பாய் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Related posts:
சீரற்ற காலநிலையால் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு!
VAT வரி அதிகரிப்பு - ஆயிரத்துக்கும் மேற்பட்ட வெதுப்பகங்கள் நாடு முழுவதும் மூடப்பட்டுள்ளன - பேக்கரி உ...
கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட யாழ். பல்கலைக்கழக ஜனநாயக ஊழியர் சங்கம்!
|
|
|


