1000 KM நீளமான சுரங்கம் பாதை அமைக்கிறது சீனா!!
Wednesday, November 1st, 2017
1000 கிலோ மீற்றர் நீளமான சுரங்கம் ஒன்றை அமைப்பதற்கான நவீன தொழில்நுட்பம் குறித்த ஆய்வில் சீனாவின் பொறியியலாளர்கள் ஈடுபட்டுள்ளனர் என செய்திகள் வெளியாகியுள்ளன.
திபெத்தின் ப்ரம்மபுத்ரா ஆற்றில் இருந்து சீனாவிற்கு நீரைக் கொண்டுச் செல்லும் நோக்கில் இந்த சுரங்கம் அமைக்கப்படவுள்ளது.சீனாவின் சின்ஜியாங் பிராந்தியத்தை கலிஃபோர்னியாவாக மாற்றும் வேலைத்திட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பதாக, கூறப்படுகிறது.ஆனால் இந்த திட்டத்தினால் ஹிமாலயா பிராந்தியத்தில் கடுமையான சூழல் பாதிப்புகள் ஏற்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் ஆசியாவின் பல நீர்வீழ்ச்சிகள், நீர்நிலைகள் என்பன இல்லாமல் போகும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது
Related posts:
சுவாதி வழக்கில் திடீர் திருப்பம் ! அவரது குடும்பத்தினரே சுவாதியை கொலை செய்தனர் !!
ஊரடங்கை தளர்க்கும் முன் உலக நாடுகள் கவனம் கொள்ள வேண்டும் – எச்சரிக்கை விடுத்துள்ள உலக சுகாதார அமைப்ப...
அடுத்த ஜி20 மாநாட்டில் கலந்துகொள்ளுமாறு புட்டினிற்கு அழைப்பு விடுக்கப்படும் - பிரேசில் ஜனாதிபதி லூயி...
|
|
|


