நாடாளுமன்ற நுழைவாயிலில் ஆர்ப்பாட்டம் : மூடப்பட்டது வீதி!
Monday, October 30th, 2017
புதிய அரசியலமைப்பின் இடைக்கால அறிக்கை தொடர்பாக நாடாளுமன்றில் வாதப்பிரதிவாதங்கள் ஆரம்பித்துள்ள நிலையில் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினரால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மேற்படி இந்த விவாதத்தில் ஆளுங்கட்சியுடன் த.தே.கூட்டமைப்பு மற்றும் ம.வி.முன்னணி ஆகியன ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் கூட்டு எதிர்க்கட்சி மாத்திரமே புதிய அரசியலமைப்புக்கு எதிராக விவாதத்தில் கலந்து கொண்டுள்ளது.
இவர்களின் ஆர்ப்பாட்டம் காரணமாக நாடாளுமன்றத்திற்கு செல்லும் பொல்துவ சந்தி வீதி மூடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதனால் அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
பொருளாதார நெருக்கடி இலங்கை மக்களைப் பாதிக்கவில்லை - எரிக் சொல்ஹெய்ம் தெரிவிப்பு!
தொழில் துறையில் முழுமையாக மாற்றங்களை ஏற்படுத்த புதிய தொழில்துறை சட்டம் - நடவடிக்கை எடுத்து வருவதாக...
தேர்தலில் வாக்களிப்பதற்கு செல்லுபடியாகும் அடையாள அட்டையை வைத்திருப்பது அவசியம் - தேர்தல் ஆணையாளர் ந...
|
|
|


