கடன் கொடுத்தவர்கள் அழுத்தம்: மூன்று பிள்ளைகளு டன் இளம் தாய் தற்கொலை – அரியாலையில் சம்பவம்!

Friday, October 27th, 2017

 

கடன் சுமை காரணமாக அரியாலைப் பகுதியைச் சேர்ந்த இளம் குடும்பத்தாய் தனது மூன்று பிள்ளைகளுடன் தற்கொலை செய்துள்ள சம்பவம் யாழ்ப்பாணத்தை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

கடந்த மாதம் கணவர் மரணமடைந்திருந்த நிலையில் கடும் வறுமையில் இருந்த குறித்த இளம் குடும்பப் பெண் கடன் கொடுத்தவர்களின் அழுத்தம் தாங்கமுடியாது தனது மூன்று பிள்ளைகளுடன் தற்கொலை செய்துள்ளார்.  குறித்த நால்வரது உடலங்கள் யாழ் போதனா வைத்தியசாலையில் தற்போது வைக்கப்பட்டுள்ளன.

30 வயதடைய குறித்த இளம் தாயைக்கு கடன் கொடுத்தவர்கள் மனரீதியாக கடுமையான தாக்கங்களை கொடுத்துள்ளனர் என்றும் இதன் காரணமாகவே குறித்த தாய் தனது 6, 4 மற்றும் ஒரு வயது பிள்ளைகளுடன் தற்கொலை செய்துள்ளார் என்றும் தெரியவருகின்றது.

குறித்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106