இலங்கை அணியுடன் பாகிஸ்தான் செல்லும் அமைச்சர் தயாசிறி!
Thursday, October 26th, 2017
இலங்கை -பாகிஸ்தான் அணிகளுக்கிடையில் லாஹூரில் இடம்பெறவுள்ள இருபதுக்கு இருபது போட்டித் தொடரில் தானும் கலந்து கொள்ளப் போவதாக விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
இந்த போட்டித் தொடரின் பாதுகாப்பு தொடர்பில் எவ்வித பிரச்சினையும் இல்லை என சர்வதேச கிரிக்கட் வாரியம் தெரிவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.தம்மால் காவற்துறை மா அதிபருக்கு விடுத்த கோரிக்கைக்கு அமைவாக இந்நாட்டு பிரதி காவற்துறை மா அதிபர் ஒருவர் இது தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
Related posts:
உலக கிண்ண கால்பந்து போட்டிகளில் விளையாடும் அணிகளை 48 ஆக உயர்த்த ஆலோசனை- − பீபா தலைவர்!
மைக்கல் உதைப்பந்தாட்டம் ஊரெழு றோயல் - ஞானமுருகன் மின்னொளியில் நாளை பலப்பரீட்சை!
கனவு அணியில் விராட் கோஹ்லிக்கு இடம் மறுப்பு!
|
|
|


