துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள கொழும்பில் இருந்து விசேட அதிகாரிகள்!
Wednesday, October 25th, 2017
யாழ்.மணியம்தோட்டம் உதயபுரம பகுதியில் இளைஞர் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள கொழும்பில் இருந்து விசேட குற்றத் தடுப்பு விசாரணை அதிகாரிகள் நாளை வியாழக்கிழமை யாழிற்கு வருகை தவுள்ளனர்.
பொலிஸ்மா அதிபர் பூஜித ஜெயசுந்தரவினால் இந்த குற்றத் தடுப்பு விசாரணை அதிகாரிகள் குழு நியமிக்கப்பட்டுள்ளது. கடந்த 22 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை யாழ்.மணியம் தோட்டம் உதயபுரம் பகுதியில் சிவில் உடையில் வந்தவர்கள் இளைஞர் மீது துப்பாக்கிச் சூட்டுப்பிரயோகம் மேற்கொண்டதில் சூட்டுக்கு இலக்காகிய இளைஞர் உயிரிழந்தார்.
துப்பாக்கிச் சூட்டினை மேற்கொண்டது பொலிஸார் தான் என உயிரிழந்த இளைஞருடன் வந்த நபர் தெரிவித்ததுள்ளதுடன், பொலிஸார் சம்பவத்தினை புரியவில்லை என்றும் பொலிஸ் தரப்பு மறுப்பு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், மேற்படி துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தினை யார் செய்திருக்கலாம் என்ற சந்தேகம் பொலிஸ் தரப்பில் இருந்து வருவதுடன், முப்படை மீதும் விசாரணைகளை முன்னெடுக்கும் முன்நகர்வுகள் இடம்பெற்று வருகின்றன.
பொலிஸ்மா அதிபரினால் கொழும்பில் உள்ள குற்றத்தடுப்பு பொலிஸ் உயர் அதிகாரிகள் குழு நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த குழுவினர் நாளை (26.10) யாழிற்கு வருகை தந்து, துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
Related posts:
பட்டதாரிகள் நியமனத்தில் போராளிகளுக்கு முன்னுரிமை - வடமாகாண ஆளுநர் !
பருத்தித்துறை பேருந்திலும் கோரோனா பாதித்த பெண் பயணம் : சாரதி, நடத்துனர் தனிமைப்படுத்தல் - பருத்தித்...
மேலும் 2,275 பேருக்குக் கொரோனா தொற்று கண்டறிவு - சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தகவல்...
|
|
|


