யாழ்,மன்னார், வவுனியா மாவட்டங்களின் சில பகுதிகளில் இன்று மின்தடை 

Saturday, October 21st, 2017

மின்சாரப் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக வடமாகாணத்தின் யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா மாவட்டங்களின் சில பகுதிகளில் இன்று சனிக்கிழமை(21) மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

இதன்பிரகாரம், இன்று காலை-08 மணி முதல் மாலை-05.30 மணி வரை யாழ். மாவட்டத்தின் பொன்னாலை, காரைநகர், காரைநகர் இராணுவ, கடற்படை முகாம், காரைநகர் கடற்படை ஜெற்றி, வடலியடைப்பு, தொல்புரம், சத்தியகாடு, கள்ள வேம்படி, சுழிபுரம், பத்தானை, கேணியடி ஆகிய பகுதிகளிலும்,
இன்று காலை-08 மணி முதல் மாலை-05.30 மணி வரை மன்னார் மாவட்டத்தின் திருக்கேதீஸ்வரம், மாந்தை மேற்கு, சிறுநாவற் குளம், நாகதாழ்வு ஆகிய பகுதிகளிலும்,
இன்று காலை- 08 மணி முதல் மாலை-05.30 மணி வரை வவுனியா மாவட்டத்தின் சாளம்பைக்குளம் பிரதேசத்திலும் மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபை மேலும் தெரிவித்துள்ளது.

Related posts:

யாழ் மாவட்ட மக்களுக்கு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் மருத்துவர் சத்யமூர்த்தி விடுக்கும் அவசர கோரி...
அரச உயர் பதவி முன்னுரிமையில் அஜித்த நிவாட் கப்ராலுக்கும் 5 ஆவது இடம் – மத்திய வங்கியின் ஆளுநருக்கு அ...
விமர்சனங்களை ஒருபோதும் பொருட்படுத்த போவதில்லை - புரட்சிகரமான மாற்றம் நிச்சயம் செய்யப்படும் - ஜனாதிப...