27 ஆண்டுகளுக்குப் பின் ஈராக்கிற்கு நேரடி விமானம் !
Friday, October 20th, 2017
சவுதி அரேபியாவின் பிளைனாஸ் விமான நிறுவனம், 27 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக ஈராக்கிற்கு நேரடி விமான சேவையை வழங்கி உள்ளது.
ஈராக் அதிபர் சதாம் உசைன் 1990-ஆம் ஆண்டு குவைத் மீது படையெடுத்ததைத் தொடர்ந்து ஈராக் உடனான விமான சேவைகளை சவுதி அரேபியா நிறுத்தியது.
தற்போது அரபு பிராந்தியத்தில் ஈரானின் செல்வாக்கு அதிகரித்து வருவதைத் தடுக்கும் நோக்கில், ஈராக்குடன் நெருங்கிய தொடர்புகளை வைத்துக்கொள்ள சவுதி அரேபியா விரும்புகிறது. இதற்கான முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்நிலையில், சவுதி அரேபியாவின் பட்ஜெட் விமான சேவை நிறுவனமான பிளைனாஸ், ஈராக் தலைநகர் பாக்தாத்திற்கு நேரடி விமான சேவையை ஆரம்பித்துள்ளது.
Related posts:
ஜம்மு காஷ்மீரில் இந்திய இராணுவ மீது தாக்குதல்: 17 படையினர் பலி!
அந்தமான் நிக்கோபார் தீவுகளில் நிலநடுக்கம்!
மழலையர் கூட்டத்தில் கார் புகுந்து விபத்து - 02 குழந்தைகள் உயிரிழப்பு!
|
|
|


