உபுல் தரங்க பாகிஸ்தானுடனான T – 20 தொடரில் இருந்து விலக முடிவு!
Tuesday, October 17th, 2017
இலங்கை பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான இருபதுக்கு இருபது போட்டித்தொடரில் இருந்து இலங்கை அணித்தலைவர் உபுல் தரங்க விலக தீர்மானித்துள்ளதாக கிரிக்கட் தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பாதுகாப்பு காரணம் கருதி அவர் இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த வெற்றிடத்திற்காக அதிரடி துடுப்பாட்ட வீரர் குசல் ஜனித் பெரேரா இலங்கை அணியில் இணைத்துக்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது மேலும் இ இருபதுக்கு இருபது போட்டித்தொடரின் தலைமைப்பதவியும் குசலுக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.உபாதை காரணமாக குசல் ஜனித் பெரேரா நீண்ட காலமாக போட்டிகளில் பங்கேற்கவில்லை.எவ்வாறாயினும் அவரின் இறுதி ஸ்கேன் பரிசோதனையின் பின்னர் போட்டிகளில் கலந்து கொள்வார் என குறிப்பிடப்பட்டுள்ளது
Related posts:
கோலியே இலக்கு - புவனேஸ்வரகுமார்
சூதாட்டத்தில் ஈடுப்பட்டால் மரண தண்டனை - பிரபல வீரர் ஜாவித் மியாந்தத்!
ஆப்கானிஸ்தான் மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையில் முதன் முறையாக இருதரப்பு கிரிக்கெட் தொடர்!
|
|
|


