இரட்டைச் சகோதரிகளின் சாதனை!
Monday, October 9th, 2017
வெளியாகியுள்ள தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் இரட்டைச் சகோதரிகள் ஒரே புள்ளிகளைப் பெற்று சாதனைப்படைத்துள்ளனர்.
காலி – கிங்தொட்ட பியதிகமவைச் சேர்ந்த கே.எம்.எச் சிஹலி சிதுமியா மற்றும் மஹெலி நெதுமியா ஆகிய இரட்டைச் சகோதரிகள் தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் 177 புள்ளிகளைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.ஒன்றாக பிறந்து, ஒன்றாக வளர்ந்து, ஒரே பாடசாலையில், ஒரே வகுப்பில் கல்வி கற்று, தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் இருவரும் ஒரே புள்ளிகளைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.இதேவேளை, இரட்டைச் சகோதரர்களின் தந்தையான கே.எம்.எச். ரஞ்சித் குமார ஹிக்கடுவ பிரதேச செயலகத்தில் கடமையாற்றுவதுடன், தாயாரான சுஜீவா மனோகரி தனியார் நிறுவனமொன்றில் கடமையாற்றி வருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
இலங்கையின் புதிய வரைபடம்: ஜூன் மாதமளவில் பொதுமக்கள் கொள்வனவுக்கு!
புகைக்கசிவு தர நிர்ணய சான்றிதழை வாகனத்தில் வைத்திருப்பது கட்டாயம்!
இலங்கையில் உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரிப்பு - மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக...
|
|
|


