உலங்கு வானூர்தி விபத்து – 5 பேர் பலி!
Friday, October 6th, 2017
இந்திய விமானபடைக்கு சொந்தமான எம்.ஐ-17 உலங்கு வானூர்தியொன்று அருணாச்சல பிரதேசம் அருகே விபத்துக்குள்ளாகியுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்திய விமானப்படைக்கு சொந்தமான எம்.ஐ-17 ரக விமானம் இன்று அதிகாலை 6 மணியளவில் அருணச்சல பிரதேசம் தவாங் பகுதியில் பராமரிப்பு பணியில் ஈடுப்பட்டிருந்த போது விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விமானத்தில் பயணித்த 6 பணியாளர்களில் 5பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழிந்ததாகவும் மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாகவும் இந்திய விமானப்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விபத்து பகுதியான அருணாச்சல பிரதேசம்-சீனா எல்லை பகுதிக்கு விரைந்த மீட்பு பணியினர் படுகாய மடைந்தவரை மீட்டு அருகே உள்ள மருத்துவ மனையில் அனுமதித்துள்ளனர்.மேலும் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைப்பெற்று வருவதாகவும் இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன
Related posts:
நியூஜெர்ஸியில் குண்டு வைத்ததாக அஹமது கான் மீது வழக்குப் பதிவு!
பிரித்தானியா தயாராக வேண்டும் - இங்கிலாந்து வங்கியின் முன்னாள் ஆளுநர்!
பறந்து கொண்டிருந்த கிளிகள் திடீரென சாலையில் விழுந்து இறப்பு: பரிசோதனையில் அதிர்ச்சி தகவல் வெளியானது...
|
|
|


