வற்றாப்பளை கண்ணகி அம்மன் வருடாந்தப் பொங்கல் விழாவையொட்டி விசேட பேருந்து சேவைகள்: யாழ்.சாலை முகாமையாளர்
Saturday, May 21st, 2016
பிரசித்தி பெற்ற முல்லைத் தீவு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்தப் பொங்கல் விழாவையொட்டி நாளை 22,23,24 ஆம் திகதிகளில் யாழ். மத்திய பேருந்து நிலையத்திலிருந்து கண்ணகி அம்மன் ஆலயம் வரை விசேட பேருந்து சேவைகள் இடம்பெறவுள்ளன.
கிராமப் புறப் பகுதிகளிலிருந்து வற்றாப்பளை செல்லும் அடியவர்கள் ஒரு குழுவாக ஒன்றிணைந்து இலங்கை போக்குவரத்துச் சாலைகளில் கோரிக்கை விடுக்கும் பட்சத்தில் அவர்களது இடத்திற்குச் சென்று அவர்களை வற்றாப்பளை அம்மன் ஆலயத்திற்கு அழைத்துச் சென்று மீண்டும் அவர்களை உரிய இடத்தில் சேர்க்க நடவடிக்கை எடுத்துள்ளதாக யாழ்.சாலை முகாமையாளர் செ – குலபாலசெல்வம் தெரிவித்துள்ளார்.
Related posts:
நுவரெலியா மாவட்ட வேலையில்லா பட்டதாரிகள் ஆர்ப்பாட்டம்
500 மில்லியன் யுவான் உதவியின் கீழ் சீனாவில் இருந்து முதல் தொகுதி அரிசி நாட்டை வந்தடைந்தது - சீன வெளி...
சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை – வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறல்!
|
|
|


