தனியாரிடமிருந்து மின்சாரத்தை பெற்றுக்கொள்ள அமைச்சரவை அனுமதி!
Thursday, October 5th, 2017
தனியார் துறையிடம் இருந்து விரைவில் 9 பில்லியன் ரூபாவிற்கு மின்சாரத்தை பெற்றுக் கொள்ள அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மின்சாரத்துறை அமைச்சினால் இதற்கான யோசனை அமைச்சரவைக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்டது.வறட்சியான காலநிலை காரணமாக மின்சாரப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனை நிவர்த்தி செய்யும் வகையில் குறித்த இந்த அமைச்சரவை யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆறு மாதங்களாக இவ்வாறு தனியார் துறையினரிடம் இருந்து மின்சாரம் பெறப்பட்ட போதும், தொடர்ந்தும் மின்சாரம் வழங்க குறித்த நிறுவனம் மறுப்புத் தெரிவித்துள்ள நிலையிலேயே, 9 பில்லியன் ரூபாய்க்கு மின்சாரத்தைப் பெற்றுக் கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, மின்சாரத்துறை பிரதி அமைச்சர் அஜித் பீ. பெரேரா மேலும் தெரிவித்துள்ளார்.
Related posts:
நாளை அரச ஊழியர்களுக்கு வழங்கப்படவிருந்த விடுமுறை இரத்து.!
இராணுவ முகாம்கள் அகற்றப்பட மாட்டாது - ருவன் விஜயவர்தன!
மீள் நிரப்பு நிலையங்களில் மேலதிகமாக எரிபொருள்: தாங்கி ஊர்திகள் திருப்பி அனுப்பப்பட்டன - வலுசக்தி அமை...
|
|
|


