கடலடி கேபிள் பரிமாற்ற நிலையம் திறந்துவைப்பு!

Wednesday, October 4th, 2017

தெற்காசிய பிராந்தியத்தில் இலங்கையை டிஜிற்றல் கேந்திர நிலையமாக மாற்றும் அதிவேக கடலடி கேபிள் வலைப்பின்னலின் பரிவர்த்தனை நிலையத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திறந்து வைத்துள்ளார்.

இந்தப் பரிவர்த்தனை வலயம் மாத்தறையில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இதனை ஸ்ரீலங்கா ரெலிக்கொம் நிறுவனம் நிர்மாணித்துள்ளது. இலங்கைக்கு செக்கனில் 48 ரெரா பைற் வேகத்தில் தகவல்களை வழங்கக்கூடிய பான்ட் வித் வசதியை ஏற்படுத்தும் வகையில் பரிவர்த்தனை நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா டெலிக்கொம் பிஎல்சி நிறுவனத்தினால் மாத்தறை பிரதேசத்தில் நிறுவப்பட்டுள்ள இந்த SEA-ME-WE5 கடலடி கேபிள் பரிமாற்ற நிலையமானது. 48Tbps வேகமுடைய பூகோள Bandwidth பரப்பை இலங்கைக்கு உரித்தாக்கி, தென்கிழக்காசிய, மத்திய கிழக்கு மற்றும் மேற்கு ஐரோப்பாவைச் சேர்ந்த 17 நாடுகளின் தொலைத் தொடர்பாடல் நிறுவனங்கள் பலவற்றின் பங்களிப்புடன் ஆரம்பிக்கப்பட்டுள்ள.

 இந்த கடலடி தரவுப் பரிமாற்ற நிலையம் இலங்கையை பொருளாதார டிஜிட்டல் யுகத்தை நோக்கி கொண்டு செல்லும் சந்தர்ப்பத்தில் சர்வதேச சேவை வழங்கலை வினைத்திறனாக்குவதற்காக அமுல்படுத்தப்படும் விசேட திட்டமாகும். கடலடி தரவுப் பரிமாற்ற நிலையத்தை ஜனாதிபதி டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் ஊடாக காலியிலிருந்து ஆரம்பித்து வைத்து காலியில் நிறுவப்பட்டுள்ள கேபிள் டிப்போவுக்கான அடிக்கல் நாட்டலையும் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் ஊடாக மேற்கொண்டார்.

இந்த நிகழ்வில் அமைச்சர்களான ஹரீன் பெர்னாண்டோ, மங்கள சமரவீர, இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன, பிரதியமைச்சர் தாரநாத் பஸ்நாயக்க, தென்மாகாண அமைச்சர் சந்திம ராசபுத்திர உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளும் ஸ்ரீலங்கா டெலிக்கொம் நிறுவன தலைவர் குமாரசிங்க சிறிசேன உள்ளிட்ட பணிப்பாளர் சபையினரும் கலந்து கொண்டனர்.

Related posts:

அபராத தொகையை செலுத்த முடியாது சிறையிலுள்ள கைதிகளை ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுவிக்க நடவடி...
போக்குவரத்து சேவை குறித்து மக்கள் முன்வைக்கும் குறைகள் தொடர்பில் அனைவரும் கவனம் செலுத்தி தரமான போக்க...
சகல கட்சிகளும் அடங்கிய நாடாளுமன்ற சபை அவசியம் - உயரிய சபையின் கலாசாரத்தை மாற்றும் தருணமிது – பிரதமர்...