யாழில் மகாத்மாகாந்தியின் 148 ஆவது ஜெயந்தி தினம் அனுஷ்டிப்பு !
Monday, October 2nd, 2017
இந்தியாவிற்குச் சுதந்திரம் பெற்றுக் கொடுத்த அண்ணல் மகாத்மாகாந்தியின் 148 ஆவது ஜெயந்தி தினம் அகில இலங்கை காந்தி சேவா சங்கம் மற்றும் யாழ். இந்தியத் துணைத் தூதரகத்தின் இணை ஏற்பாட்டில் இன்று திங்கட்கிழமை(02) முற்பகல் யாழில் சிறப்பாக இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு முன்பாக நிறுவப்பட்டுள்ள மகாத்மா காந்தியின் உருவச் சிலையடியில் அகில இலங்கை காந்தி சேவா சங்கத்தின் தலைவர் ந. சிவகரன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் யாழ். இந்தியத் துணைத் தூதுவர் ஆ. நடராஜன் முதன்மை விருந்தினராகவும், இந்தியாவிலிருந்து யாழ். வருகை தந்துள்ள பேராசிரியர் கலாநிதி- கு.ஞானசம்பந்தன் சிறப்பு விருந்தினராகவும் கலந்து கொண்டுள்ளனர்.
மகாத்மாகாந்தியின் உருவச் சிலைக்கு மலர் மாலைகள் அணிவித்துக் கெளரவிக்கப்பட்டுள்ளதுடன், மலர் வணக்கமும் செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து நிகழ்வில் கலந்து கொண்ட அனைவரிற்கும் பயன்தரு தென்னை மரக்கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன
Related posts:
நாடாளுமன்றில் கடதாசி பாவனையை குறைக்க நடவடிக்கை - ஜனவரி முதல் நடைமுறையாகும் என சுற்றாடல் அமைச்சர் மஹி...
பாடசாலை வசதிக் கட்டணத்தை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது - அரச, மாகாண மற்றும் அரச தொழிற்சங்கங்களின...
பணம் பறிக்கும் மோசடி கும்பல் - உடன் தகவல் வழங்குமாறு பொதுமக்களுக்கு விடுக்கப்பட்ட அவசர அறிவுறுத்தல்!
|
|
|


