மின்சாரம் தாக்கி துருக்கி பிரஜை பலி!
Monday, October 2nd, 2017
கப்பல் ஒன்றில் மின்சாரம் தாக்கியதில் துருக்கி நாட்டவர் ஒருவர் ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன.
ஈரானில் இருந்து இந்தியா நோக்கி பயணித்த கப்பல் ஒன்றில் இருந்த துருக்கி நாட்டவர் ஒருவரே இவ்வாறு மின்சாரத் தாக்குதலுக்கு இலக்கான நிலையில், ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் பலியாகியுள்ளார்.
இவர் துருக்கி நாட்டைச் சேர்ந்த 24 வயதான ஒருவர் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். சடலம் ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்
Related posts:
உடுவில் வை.எம்.சி.ஏக்கு ஈ.பி.டி.பி விளையாட்டு உபகரணம் வழங்கிவைப்பு.
யாழ் நகர வீதிகளில் சி.சி.ரி.வி. கமராக்களை பொருத்த நடவடிக்கை!
யாழ். பல்கலைக்கழக இணைந்த சுகாதார விஞ்ஞானங்கள் பீட புதுமுக மாணவர்களுக்கான அறிமுக நிகழ்வு!
|
|
|


