3 மாகாணங்களின் தேர்தல்கள் மார்ச் மாதத்திற்கு முன்னர் – பிரதமர்

Thursday, September 21st, 2017

கிழக்கு, சப்ரகமுவ மற்றும் வடமத்திய மாகாணங்களின் தேர்தல்கள் எதிர்வரும் மார்ச் மாதத்திற்கு முன்னர் நடத்தப்படும் என பிரதமர் ரணில் விக்கரமசிங்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற மாகாண சபை தேர்தல்களின் திருத்தச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

குறித்த மூன்று மாகாண சபைகளின் ஆயுட்காலம் இந்த ஆண்டுடன் நிறைவடைய உள்ள நிலையில், பிரதமர் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார் அத்துடன் உள்ளுராட்சி மன்ற தேர்தல்களையும் எதிர்வரும் மார்ச் மாதத்திற்கு முன்னர் நடத்த தீர்மானித்துள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.

Related posts:


அடுத்த வரும் நாட்கள் இலங்கைக்கு தீர்மானம் மிக்க நாட்கள் இருக்கும் - அரச மருத்து அதிகாரிகள் சங்கம்!
யாழ்.பல்கலைக்கழகத்தில் பகிடிவதை - சந்தேகத்தில் சிரேஷ்ட மாணவர்கள் 18 பேருக்கு தற்காலிக வகுப்புத் தடை ...
கல்வி பொது தராதர சாதாரண தரப் பரீட்சையின் முதற்கட்ட மதிப்பீட்டுப் பணிகள் எதிர்வரும் 18 ஆம் திகதி ஆரம்...