இந்திய வீராங்கனை பிரியங்காவுக்கு 8 வருட தடை!
Wednesday, September 13th, 2017
ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கிய இந்திய தடகள வீராங்கனை பிரியங்காவுக்கு 8 ஆண்டுகள் விளையாடத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்திய தடகள வீராங்கனை 29 வயதான பிரியங்கா பன்வார், 2014 ஆம் ஆண்டு ஆசிய விளையாட்டில் 4 x 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் தங்கப்பதக்கம் வென்றார்.
கடந்த ஆண்டு இவர் 2 ஆவது முறையாக ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கினார், இதையடுத்து தேசிய ஊக்கமருந்து தடுப்பு கழகத்தின் ஒழுங்கு நடவடிக்கை கமிட்டி விசாரணை நடத்தி நேற்று (11) முடிவை அறிவித்தது.
இதன்படி பிரியங்காவிற்கு 8 ஆண்டுகள் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது, 2016 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் இருந்து தடை காலம் கணக்கிடப்படும். இதன் மூலம் அவரது விளையாட்டு வாழ்க்கை முடிவுக்கு வருகிறது.
Related posts:
தொடர்ந்து நான்கு சதங்கள் அடித்து நியூசிலாந்து வீராங்கனை சாதனை!
பங்களாதேஷ் பிரீமியர் லீக்கிற்காக இலங்கையிலிருந்து 11 வீரர்கள்!
சென்னை அணியின் 100 வது வெற்றி பதிவு!
|
|
|


